இந்தியா

மே மாதத்தில் 19 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்

1st Jul 2022 09:25 PM

ADVERTISEMENT

இந்தியாவில் கடந்த மே மாதத்தில் மட்டும் 19 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் 50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள சமூக வலைத்தள நிறுவனங்கள் மாத அறிக்கையை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த மே மாதத்திற்கான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது.

இதையும் படிக்க | நடிகர் சிம்புவுக்கு கோல்டன் விசா வழங்கியது அமீரகம்

மே 1ஆம் தேதி முதல் மே 31 வரையிலான காலத்திய அறிக்கையில் பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 19 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த மார்ச் மாதம் 18.05 லட்சம் கணக்குகளும், ஏப்ரல் மாதம் 16 லட்சம் கணக்குகளும் முடக்கப்பட்ட நிலையில் மே மாதத்தில் அந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT