இந்தியா

உத்தரப் பிரதேச தேர்தல்: காங்கிரஸ் 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

26th Jan 2022 08:46 PM

ADVERTISEMENT


உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 89 பேர் அடங்கிய 3-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக மார்ச் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 40 சதவிகித இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதியளித்துள்ளது.

இதையும் படிக்கநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுக நாளை ஆலோசனை

இதையொட்டி 125 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும், 41 பேர் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் காங்கிரஸ் ஏற்கெனவே வெளியிட்டுவிட்டது. 

ADVERTISEMENT

இதன் தொடர்ச்சியாக தற்போது 89 பேர் அடங்கிய 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில், 37 பேர் பெண் வேட்பாளர்கள்.

Tags : UP Election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT