இந்தியா

பெங்களூருவில் ரூ.5.3 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

26th Jan 2022 06:08 PM

ADVERTISEMENT

பெங்களூரு விமான நிலையத்தில் 5.3 கோடி மதிப்பிலான போதைப்பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிக்க | டாடா குழுமத்திடம்  நாளை(ஜன.27) ஏர் இந்தியா நிறுவனம் ஒப்படைப்பு

கடந்த ஜன.22 ஆம் தேதி துபையிலிருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த பயணியின் பையைப் பரிசோதனை செய்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் அதன் வடிவமைப்பு இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் அதைச் சோதனை செய்ததில் மறைத்து வைக்கப்படிருந்த 754 கிராம் எடைகொண்ட ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

இதன் சர்வதேச சந்தை மதிப்பு 5.3 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், கடத்தலில் ஈடுபட்ட பயணியை என்டிபிஎஸ் சட்ட விதிகளின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT