இந்தியா

மகாராஷ்டிர சாலை விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

25th Jan 2022 11:55 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலம் செல்சுரா பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 

மகாராஷ்டிராவில் செல்சுரா அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார். 

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்தார்.

ADVERTISEMENT

மகாராஷ்டிராவின் வார்தா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பாலத்திலிருந்து கார் விழுந்ததில் மருத்துவ மாணவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.வின் மகன் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளன. இன்று அதிகாலை 1:30 மணியளவில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT