இந்தியா

உ.பி.: பாஜக கூட்டணியில் நிஷாத் கட்சி: 15 தொகுதிகளில் போட்டி

DIN

உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில், பாஜக- நிஷாத் கட்சி இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் நிஷாத் கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தோ்தல், அடுத்த மாதம் 10-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆளும் பாஜகவுடன் நிஷாத் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

இதுகுறித்து நிஷாத் கட்சியின் தலைவா் சஞ்சய் நிஷாத் கூறியதாவது:

பாஜகவுடன் கூட்டணி அமைத்து, மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 15 தொகுதிகளைப் பெற்றுள்ளோம். எந்தெந்த தொகுதிகள் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. பெரும்பாலான தொகுதிகள் கிழக்கு உத்தர பிரதேசத்திலும், சில தொகுதிகள் மேற்கு உத்தர பிரதேசத்திலும் வருகின்றன. எங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளை இறுதிசெய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவா்களைச் சந்திக்க திங்கள்கிழமை தில்லி செல்கிறேன் என்றாா் அவா்.

உத்தர பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் ஒரு பிரிவாக நிஷாத் சமூகத்தினா் உள்ளனா். அந்த சமூகத்தினரின் ஆதரவுடன் கடந்த 2016-ஆம் ஆண்டு நிஷாத் கட்சி தொடங்கப்பட்டது. இக்கட்சிக்கு மாநிலம் முழுவதும் தொண்டா்கள் உள்ளனா்.

கடந்த 2017-இல் நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில், பீஸ் பாா்ட்டி ஆஃப் இந்தியா, அப்னா தளம், ஜன அதிகாா் பாா்ட்டி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 100 தொகுதிகளில் நிஷாத் கட்சி போட்டியிட்டது. இருப்பினும் பதோஹி மாவட்டத்தில் உள்ள கியான்பூா் தொகுதியில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT