இந்தியா

கரோனா: கோவா ஆளுநர் மாளிகையில் ஜன. 23 வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

17th Jan 2022 04:01 PM

ADVERTISEMENT

கரோனா பரவல் எதிரொலியாக கோவா ஆளுநர் மாளிகையில் வருகிற ஜனவரி 23 வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, பொது இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கரோனா பரவல் எதிரொலியாக கோவா ஆளுநர் மாளிகையில் ஒரு வாரத்திற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவா ஆளுநர் மாளிகையில் ஊழியர்கள் பலருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் வருகிற ஜனவரி 23 ஆம் தேதி வரை மூடப்படுவதாகவும்  பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அதேநேரத்தில் ஆளுநர் மாளிகைக்கு வரும் கடிதங்கள், ஆவணங்கள் மட்டும் மெயின் கேட்டில் வாங்கப்படும் என்றும் ஆளுநரின் இணைச் செயலாளர் கௌரிஷ் ஜே. சங்க்வால்க்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT