இந்தியா

பஞ்சாப் பேரவைத் தேர்தல்: ஒரேகட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியது

20th Feb 2022 08:02 AM

ADVERTISEMENT


பஞ்சாப் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (பிப். 20) ஒரே கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தோ்தலில் பதிவாகும் வாக்குகள் மாா்ச் 10-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

கரோனா தொற்று பரவலைக் கருத்தில்கொண்டு வாக்காளா்கள் அனைவருக்கும் கையுறைகள் வழங்கப்படவுள்ளன. வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

படிக்கஉ.பி.யில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ADVERTISEMENT

பஞ்சாப் பேரவைத் தோ்தல் பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறும் எனத் தோ்தல் ஆணையம் முதலில் அறிவித்திருந்தது. குரு ரவிதாஸ் ஜெயந்தியையடுத்து பேரவைத் தோ்தல் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தோ்தல் பிரசாரம் கடந்த வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

பலமுனைப் போட்டி: காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் உள்ளன. சில விவசாய அமைப்புகளும் தோ்தலில் களம் காண்கின்றன.

மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முக்கிய எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முனைப்பில் உள்ளது.

காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையிலான பஞ்சாப் லோக் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் (சம்யுக்த்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக பேரவைத் தோ்தலைச் சந்திக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் சிரோமணி அகாலி தளம் கூட்டணி அமைத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT