இந்தியா

அமைதி, முன்னேற்றத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும்: ராகுல் காந்தி

20th Feb 2022 11:38 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: உத்தரப்பிரதேசத்தின் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச மக்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் மூன்றாம் கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்ற வருகிறது. 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

இதில் வாக்களிக்க தகுதியுள்ள 2.15 கோடி வாக்காளர்களுக்கு ராகுல்  ட்விட்டர் வெளியிட்டுள்ள வேண்டுகோளில், "உத்தரப்பிரதேசத்தில் நீங்கள் செலுத்தும் வாக்குகளால் நாடு முழுவதும் மாற்றம் வரும்!. வாக்காளர்கள் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக வாக்களிக்க வேண்டும் - புதிய அரசாங்கம் அமைந்தால், புதிய எதிர்காலம் உருவாகும்" என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இன்று வாக்குப்பதிவு தொடங்கிய முக்கிய தொகுதிகளில், முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கர்ஹால் தொகுதியும் அடங்கும். அகிலேஷ் யாதவுக்கு எதிராக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் சத்ய பால் சிங் பாகேலை பாஜக களமிறங்கியுள்ளது.

அகிலேஷின் சித்தப்பாவும், பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சியின் (லோகியா) தலைவருமான சிவ்பால் சிங் யாதவ் ஜஸ்வந்த்நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT