இந்தியா

கோர விபத்தில் ரிஷப் பந்த் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டமே: காவல்துறை

30th Dec 2022 12:52 PM

ADVERTISEMENT

டேஹ்ராடூன்: ஹரித்வார் மாவட்டம் நர்சான் அருகே நேரிட்ட மிகப் பயங்கர சாலை விபத்தில், கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டமே என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தில்லியிலிருந்து ரூர்கேலாவை நோக்கி ரிஷப் பந்த் காரில் சென்று கொண்டிருந்தார். காரில் வேறு யாரும் இல்லை. இவரே காரை ஓட்டியுள்ளார். டேஹ்ராடூனிலிருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் கார் வந்து கொண்டிருந்த போது, இன்று காலை 5.30 மணியளவில் தில்லி - ஹரித்வார் நெடுஞ்சாலையில் கார் ரிஷப் பந்தின் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பில் மோதி பல முறை சுழன்று விழுந்து பிறகு காரில் தீப்பிடித்துள்ளது.

மிகப் பயங்கர சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த காரிலிருந்து ரிஷப் பந்தை வெளியே இழுத்துள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க.. முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை: குற்றவாளிகள் சிக்கியது எப்படி? 

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு டேஹ்ராடூனில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ரிஷப் பந்தின் நெற்றி, கை மற்றும் கால்களில் பலத்த காயமடைந்திருப்பதாகவும், சில இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் நல்ல நினைவுடன் இருப்பதாகவும், பேச முடிந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

அவர் வந்த கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்திருப்பதாகவும், விபத்து நடந்த இடம் போர்க்களம் போல காட்சியளிப்பதாகவும், இந்த கோர விபத்தில் அவர் உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம் என்றும் காவலர்கள் கூறுகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டும் போது ரிஷப் பந்த் தூக்கக் கலக்கத்தில் இருந்திருக்கலாம் அல்லது பனி மூட்டம் காரணமாக சாலை சரியாகத் தெரியாமல் இருந்திருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகிறார்கள். 

இதையும் படிக்க.. பிரபல நடிகையை சுட்டுக் கொன்று நாடகமாடிய கணவர்: காட்டிக்கொடுத்த குழந்தை

தீக்கிரையான கார் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது. காற்றுப்பைகள் விரிந்ததா என்பதை அறிய காரில் எந்த தடயங்களும் இல்லாமல் எரிந்திருப்பது விசாரணையை மேலும் சிக்கலாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT