இந்தியா

பாரம்பரிய விளையாட்டுகள் சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்படும்: அனுராக் தாக்குர்

9th Dec 2022 06:44 PM

ADVERTISEMENT

 பாரம்பரிய விளையாட்டுகள் விரைவில் சர்வதேச அளவிற்கு மேம்படுத்தப்படும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் மக்களவையில் உறுதியளித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் நாடு முழுவதிலும் 1000 கேலோ இந்தியா மையங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

இதையும் படிக்க: பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலக வேண்டும்: ஆர்ஜேடி முன்னாள் எம்எல்ஏ

மக்களவையில் விளையாட்டுத் துறை குறித்தும் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே விவாதங்கள் நேற்று (டிசம்பர் 8) மீண்டும் தொடங்கியது. அப்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு கிராமப்புறங்களில் விளையாட்டுகளை மேம்படுத்தும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றனர். திறமையான இளம் வீரர், வீராங்கனைகளை அடையாளம் கண்டு அவர்களது திறமையை ஊக்கப்படுத்த வேண்டும். இந்த விவாதங்கள் மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தொடங்கிவிட்டன. 

ADVERTISEMENT

இதையும் படிக்க: வெளியான இந்தியன் - 2 புகைப்படத்தை நீக்க படக்குழு தீவிரம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது: கிராமப்புறங்களில் உள்ள திறமையானவர்களை அரசு அடையாளம் கண்டு அவர்களது திறமைகளை ஊக்கப்படுத்துவதோடு, அவர்களுக்குப் பயிற்சியளிக்கவும் முடிவு செய்துள்ளது. மேலும், அவர்களை சர்வதேச அளவில் சாதனையாளராக உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் கண்டிப்பாக உருவாக்கப்பட வேண்டும். நாங்கள் அதன் ஒரு பகுதியாக 1000 கேலோ இந்தியா மையங்களை திறக்க உள்ளோம். அந்த முயற்சியில் ஏற்கனவே 733 கேலோ இந்தியா மையங்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT