இந்தியா

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ராஜிநாமா! டிச. 12ல் மீண்டும் பொறுப்பேற்பு

9th Dec 2022 01:46 PM

ADVERTISEMENT

குஜராத்தில் புதிய ஆட்சி அமைக்கும்பொருட்டு முதல்வர் பூபேந்திர படேல் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார். 

குஜராத் சட்டப்பேரவைக்கான 182 இடங்களில் 156 இடங்களில் பாஜக வெற்றி பெற்று வரலாற்று சாதனையுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியிருக்கிறது. காங்கிரஸ் வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று கடும் தோல்வியை சந்தித்திருக்கிறது. 

ஆம் ஆத்மி 5 இடங்களிலும், சமாஜவாதி ஒரு இடத்திலும், சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

1.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் பூபேந்திர படேல் வெற்றி பெற்று முந்தைய முதல்வர்கள் சாதனையை முறியடித்திருக்கிறார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க |  டிச. 12ல் குஜராத்தில் பாஜக அரசு பதவியேற்பு! 

இதையடுத்து வருகிற டிசம்பர் 12 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு முதல்வராக பூபேந்திர படேல் பொறுப்பேற்பார் என்று மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் கூறினார். 

இந்நிலையில், குஜராத்தில் புதிய ஆட்சி அமைக்கும்பொருட்டு முதல்வர் பூபேந்திர படேல், இன்று ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார். 

மாநிலத்தில் பாஜக தொடா்ந்து 7-ஆவது முறையாக ஆட்சியமைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | முடிவுகள் சொல்லும் முடிவுகள்! | குஜராத், ஹிமாசல் தேர்தல் முடிவுகள் குறித்த தலையங்கம் 

ADVERTISEMENT
ADVERTISEMENT