இந்தியா

ஆம் ஆத்மியின் அடுத்த இலக்கு எந்த மாநிலம் தெரியுமா?

9th Dec 2022 08:20 PM

ADVERTISEMENT

மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தமுள்ள 40 தொகுதிகளில் குறைந்தது 25 தொகுதிகளில் போட்டியிடும் என அந்தக் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.

40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவையின் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில், மிசோரம் மாநில ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் ஆண்ட்ரூ லால்ரெம்கிமா இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

இதையும் படிக்க: குஜராத் தேர்தல்: வெறும் 30 வாக்குகள் மட்டுமே பெற்ற வேட்பாளர், என்ன செய்தார் தெரியுமா?

அப்போது அவர் பேசியதாவது: மிசோரத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர்களை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளோம். நாங்கள் நேர்மையான மற்றும் துணிச்சலான வேட்பாளர்களைத் தேடி வருகிறோம். ஆம் ஆத்மி கண்டிப்பாக மிசோரத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் குறைந்தது 25 தொகுதிகளிலாவது போட்டியிடும். தில்லியில் உள்ள எங்களது கட்சித் தலைவர்கள் இந்த வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவாலும் எங்களது இந்த வேட்பாளர்களுக்காக தேர்தல் பிசராத்தில் ஈடுபடுவார்.

ADVERTISEMENT

ஆம் ஆத்மி தொடங்கப்பட்டு வெறும் 10 ஆண்டுகளே ஆகின்றது. குஜராத் தேர்தலில் 5 தொகுதிகளைக் கைப்பற்றியதன் மூலம் நாங்கள் தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளோம். குஜராத்தினைப் போலவே மிசோரத்திலும் ஆம் ஆத்மி கால் பதிக்கும் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT