இந்தியா

குஜராத் மக்கள் செய்ததையே திரிபுரா மக்களும் செய்ய வேண்டும்: திரிபுரா முதல்வர்

8th Dec 2022 06:36 PM

ADVERTISEMENT

வேகமான வளர்ச்சி மற்றும் சிறந்த நிர்வாகம் போன்ற காரணங்களினாலேயே அதிக அளவிலான குஜராத் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளதாக திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 8) காலை முதலே தொடங்கியது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் அளவில் வெற்றி பெற்று பாஜக 7ஆவது முறையாக மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இந்த நிலையில், திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா வேகமான வளர்ச்சி மற்றும் சிறந்த நிர்வாகம் போன்ற காரணங்களினாலேயே அதிக அளவிலான குஜராத் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மாண்டஸ் புயல்: 6 மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இயங்காது!

இது குறித்து அவர் பேசியதாவது: திரிபுரா மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சியில் அமரச் செய்ய வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும். முன்பிருந்த வன்முறை மற்றும் கலவரங்கள் திரிபுராவில் நடக்காமல் தடுக்க பாஜக மீண்டும் ஆட்சியமைப்பது முக்கியமானதாகும். குஜராத் மாநில மக்கள் மீண்டும் பாஜகவைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்குக் காரணம் பாஜக ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சியே ஆகும். குஜராத் மக்கள் செய்ததை திரிபுரா மாநில மக்களும் செய்ய வேண்டும். திரிபுராவில் நடைபெறும் வன்முறை,கலவரங்கள் மற்றும் கொலை போன்றவற்றுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே காரணம். திரிபுரா மக்கள் அவர்களிடமிருந்து தூரத்தில் இருப்பதே நல்லது என்றார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT