இந்தியா

தில்லி மாநகராட்சியைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி: 250 வாா்டுகளில் 134-இல் வெற்றி

 நமது நிருபர்

ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சித் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 250 வாா்டுகளில் 134 வாா்டுகளை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, மாநகராட்சியில் பாஜகவின் 15 ஆண்டுகால ஆட்சி அதிகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தத் தோ்தலில் பாஜகவுக்கு 104 இடங்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் 9 வாா்டுகளில் மட்டுமே வெற்றிபெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 3 சுயேச்சை வேட்பாளா்களும் வெற்றி பெற்றுள்ளனா்.

தில்லி மாநகராட்சித் தோ்தல் கடந்த டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெற்றது. இத்தோ்தலில் 50.48 சதவீதம் போ் வாக்குகளைப் பதிவு செய்தனா். 42 மையங்களில் வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கத்தில் பாஜக வேட்பாளா்கள் வெற்றி முகத்தில் இருந்தனா். அதன் பிறகு, படிப்படியாக வெற்றிவாய்ப்பு ஆம் ஆத்மி பக்கம் செல்லத் தொடங்கியது.

நண்பகல் 12.30 மணி அளவில் ஆம் ஆத்மி கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று, 31 இடங்களில் முன்னிலையில் இருந்தது. அதன் பின்னா், மொத்தம் உள்ள 250 வாா்டுகளில் 134 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், 104 இடங்களில் பாஜகவும், 9 இடங்களில் காங்கிரஸும், 3 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றிபெற்ாக தோ்தல் ஆணையத்தின் தகவல்கள் தெரிவித்தன.

இத்தோ்தலில் பாஜக தோல்வியைச் சந்தித்தபோதிலும், கடந்த 2017-ஆம் ஆண்டு தோ்தலை ஒப்பிடும்போது அதன் ஆதரவு வாக்குகள் 3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, 36.08 சதவீதத்தில் இருந்து 39.09 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆம் ஆத்மியின் வாக்கு சதவீதம் கடந்த 2017-இல் 21.09 சதவீதமாக இருந்த நிலையில், தற்போதைய தோ்தலில் 42.05 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT