இந்தியா

குஜராத்தில் கிரிக்கெட் வீரர் ஜடேஜா மனைவி வெற்றி!

8th Dec 2022 02:04 PM

ADVERTISEMENT

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா வெற்றி பெற்றார்.

குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் 182 தொகுதிகளில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

இதில், ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக ரிவாபா ஜடேஜா களமிறக்கப்பட்டிருந்தார். இவரின் கணவரும் கிரிக்கெட் வீரருமான ரவீந்திர ஜடேஜா பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பாஜக வேட்பாளர் ரிவாபா ஜடேஜா காலை முதல் முன்னிலை வகித்து வருகிறார்.

ADVERTISEMENT

இதையும் படிக் | குஜராத்தில் வரலாறு காணாத வெற்றியை நோக்கி பாஜக!

ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 56.75 சதவிகிதத்தை இதுவரை ரிவாபா பெற்றுள்ளதால் வெற்றி உறுதியாகியுள்ளது. இவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் 23 சதவிகிதம், காங்கிரஸ் வேட்பாளர் 15 சதவிகிதம் வாக்குகளை பெற்றுள்ளனர்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT