இந்தியா

இந்தியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 241ஆக குறைந்தது! 

8th Dec 2022 10:34 AM

ADVERTISEMENT

 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 241 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 

இந்தியாவில் கரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த பல வாரங்களாகவே கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை கொடுத்துள்ளது. 

ADVERTISEMENT

அந்தவகையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 241 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,46,74,190 ஆக உயர்ந்துள்ளது. 

படிக்க: சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.40,184-க்கு விற்பனை!

கரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4,244 ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,30,647 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,39,299ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை மட்டும் 219.95 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT