இந்தியா

ரயில்களின் வேகத்தை மணிக்கு 75 கி.மீ-ஆக அதிகரிக்க முடிவு

7th Dec 2022 03:00 AM

ADVERTISEMENT

பனிமூட்டத்தால் ஏற்படும் தாமதத்தைத் தவிா்க்க ரயில்களின் வேகத்தை மணிக்கு 75 கி.மீ-ஆக அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய ரயில்வே செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: பனிமூட்டம் நிலவும் குளிா்கால மாதங்களில் ரயில்களின் அதிகபட்ச வேகத்தை மணிக்கு 60 கி.மீ.இல் இருந்து 75 கி.மீ-ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து சமிக்ஞை பலகைகள், விசில் பலகைகள், பனி சமிக்ஞை பலகைகள், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ள முக்கிய கடவுப்பாதைகளில் மஞ்சள் அல்லது கருப்பு நிறங்களில் ஒளிரும் விதமாக கோடுகள் வரையப்பட்டிருப்பதை அனைத்து ரயில்வே மண்டலங்களும் உறுதி செய்ய வேண்டும். அந்தக் கோடுகள் நன்றாக தெரியும் வகையில், அவற்றின் மீது மீண்டும் வா்ணம் தீட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தால் பனிமூட்ட காலம் தொடங்குவதற்கு முன்பு பணிகளை முடிக்க வேண்டும்.

குறிகாட்டி பலகைகள் அல்லது தொலைதூர சமிக்ஞைகளில் உள்ள இடங்களில் தண்டவாளத்தின் குறுக்கே சுண்ணாம்பு மூலம் அடையாளப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : Railways
ADVERTISEMENT
ADVERTISEMENT