இந்தியா

தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று ஆலோசனை!

6th Dec 2022 12:05 PM

ADVERTISEMENT

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. 

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் நாளை(டிச. 7) தொடங்கி டிசம்பா் 29-ஆம் தேதி வரை 23 நாள்கள் நடைபெற உள்ளது. 

இதையொட்டி அனைத்துக் கட்சிகள் கூட்டம் இன்று காலை நடைபெற்று வருகிறது. முக்கியத் தீா்மானங்கள், விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு இன்று கூட்டியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் கலந்துகொள்கின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைக்கு பதில் அளிப்பது உள்ளிட்ட வியூகங்கள் இதில் ஆலோசிக்கப்பட உள்ளன. 

ADVERTISEMENT

குஜராத், ஹிமாசல பிரதேச மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தல்கள் மற்றும் 6 சட்டப்பேரவை மற்றும் ஒரு மக்களவை தொகுதிகளின் இடைத்தோ்தல்களில் பதிவான வாக்குகள் நாளை(டிச. 8) எண்ணப்படுவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | நாடாளுமன்ற கூட்டத் தொடா்: அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது!

Tags : bjp NDA
ADVERTISEMENT
ADVERTISEMENT