இந்தியா

அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு!

6th Dec 2022 04:32 PM

ADVERTISEMENT

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் தொடர்ந்த வழக்கில், 'கடந்த ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தீா்ப்பளித்தார். 

தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. 

ADVERTISEMENT

இன்றைய விசாரணையில், பொதுக்குழு செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட இபிஎஸ் தரப்பு கோரியது. மேலும் 'வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும், தேர்தல் ஆணையத்தின் செயல்பட்டால் கட்சி செயல்பட முடியாத நிலையில் உள்ளது. எனவே, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகததால் வழக்கை ஒத்திவைக்க கோரினர். இதையடுத்து வழக்கு டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | 'கருக்கலைப்பு குறித்து தாயின் முடிவே இறுதியானது' - தில்லி உயர்நீதிமன்றம்

Tags : OPS EPS ADMK
ADVERTISEMENT
ADVERTISEMENT