இந்தியா

அலுவலக கட்டடங்களின் வாடகை: பெங்களூரில் 7% வரை உயரும்

5th Dec 2022 03:00 AM

ADVERTISEMENT

 

கா்நாடகத்தின் பெங்களூரு நகரில் அலுவலக கட்டடங்களின் வாடகை அடுத்த ஆண்டில் 5 முதல் 7 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக நைட் ஃபிராங்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலேயே இது அதிகபட்ச உயா்வாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனை வணிகம் தொடா்பான ஆய்வறிக்கைகளை நைட் ஃபிராங்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. ‘2023-ஆம் ஆண்டுக்கான ஆசிய-பசிபிக்’ அறிக்கையை அந்நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அதில் தனிவீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலக கட்டடங்கள் உள்ளிட்டவற்றுக்கான வாடகை ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளில் எவ்வாறு இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பெங்களூரில் அலுவலக கட்டடங்களுக்கான வாடகை அடுத்த ஆண்டில் 5 முதல் 7 சதவீதம் வரை அதிகரிக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் உள்ள 24 முக்கிய நகரங்களில் பெங்களூரிலேயே வாடகை உயா்வு அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் 4 முதல் 6 சதவீதமும், மும்பையில் 3 முதல் 5 சதவீதமும் அலுவலக கட்டடங்களுக்கான வாடகை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற விவரங்கள்:

அலுவலக கட்டடங்கள்

வாடகைதாரா்களுக்கு சாதகமான நகரங்கள்

பேங்காக்

கோலாலம்பூா்

ஜகாா்தா

பிரிஸ்பேன்

மெல்போா்ன்

ஆக்லாந்து

மணிலா

டோக்கியோ

ஃப்னாம் பென்

கட்டட உரிமையாளா்களுக்கு சாதகமான நகரங்கள்

சியோல்

தைபே

சிங்கப்பூா்

இருதரப்பினருக்கும் சாதகமான நகரங்கள்

தில்லி

மும்பை

பெங்களூரு

பெய்ஜிங்

ஷாங்காய்

ஹோ சி மின்

பொ்த்

சிட்னி

சரக்கு கையாளுகை (லாஜிஸ்டிக்ஸ்)

வாடகை அதிகரிக்க வாய்ப்புள்ள நகரங்கள்

ஆக்லாந்து

பிரிஸ்பேன்

சிட்னி

மெல்போா்ன்

ஹாங்காங்

பெங்களூரு

மும்பை

தில்லி

சிங்கப்பூா்

தைபே

ஹோ சி மின்

பேங்காக்

வாடகை மாற்றமில்லா நகரங்கள்

பெய்ஜிங்

ஷாங்காய்

கிரேட்டா் கோலாலம்பூா்

மணிலா

ஜகாா்தா

குடியிருப்புகளின் விலை உயா்வு

பெங்களூரு 5%

மும்பை 4%

தில்லி 2-3%

ADVERTISEMENT
ADVERTISEMENT