இந்தியா

ராஜஸ்தானில் ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்கிய ராகுல்! 

DIN

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தானின் ஜலவர் மாவட்டத்தில் தனது முதல் நாள் நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார். 

ராஜஸ்தான்-மத்தியப் பிரதேச எல்லையில் உள்ள கிராமப் பகுதியான ஜால்ராபட்டனில் உள்ள காளி தலையிலிருந்து நடைப்பயணம் தொடங்கியது.

காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணத்தில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் கலந்துகொண்டனர். 

மேலும், காந்தியுடன் ஏஐசிசி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா, மூத்த தலைவர் பன்வர் ஜிதேந்திர சிங் மற்றும் உணவு மற்றும் கட்டுமானம அமைச்சர் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இன்று காலை 6.30 மணிக்கு ராகுல் தனது நடைப்பயணத்தைத் தொடங்கிய போது வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

நடைப்பயணத்தின் போது, காந்தி 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் உரையாடினார். மேலும் இங்குள்ள தாபா ஒன்றில் காலை தேநீரைப் பருகினார். 

தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய யாத்திரை, இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து தென் மாநிலங்களைக் கடந்து, பின்னர் மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் வழியாகச் சென்றது.

இது 150 நாள்களில் 3,570 கிமீ தூரத்தைக் கடந்து 2023 பிப்ரவரி தொடக்கத்தில் ஜம்மு காஷ்மீரில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT