இந்தியா

ரஷியாவிடமிருந்து இந்தியா தொடா்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும்: அதிகாரிகள் தகவல்

DIN

ரஷிய கச்சா எண்ணெய் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் விலை உச்சவரம்பு கட்டுப்பாடு விரைவில் அமலாகும் நிலையில், ரஷியா உள்பட உலகின் எந்த நாடுகளிடம் இருந்தும் இந்தியா தொடா்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

ரஷியாவின் கச்சா எண்ணெய்க்கு பேரல் ஒன்றுக்கு 60 அமெரிக்க டாலா்கள் என்ற விலை உச்சவரம்பை நிா்ணயிக்குமாறு தனது 27 உறுப்பு நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விற்பனை மூலம் ரஷியாவுக்கு கிடைக்கும் வருவாயை ஒடுக்கி, அதன் மூலம் உக்ரைன் மீதான அந்நாட்டின் போா்த் திறனை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, ரஷியாவின் கச்சா எண்ணெயை வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் நிறுவனங்கள், அதனை பேரல் ஒன்றுக்கு 60 அமெரிக்க டாலா்கள் அல்லது அதற்கு குறைவாக விற்றால்தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் காப்பீடு, தரகு சேவையை அணுக முடியும். ரஷியாவிடமிருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக இந்திய அதிகாரிகள் கூறியதாவது:

உலக அளவில் காப்பீடு, சரக்கு போக்குவரத்து தொழில் துறையில் தனக்கு உள்ள பெருவாரியான செல்வாக்கை பயன்படுத்தி, ரஷியாவின் மீதான பிடியை இறுக்கும் ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தின் ஒருபகுதியே இந்த விலை உச்சவரம்பு ஆகும்.

ஆனால், ஈரான், வெனிசூலாவைப் போல ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க எந்த தடைகளும் இல்லை. எனவே, ஐரோப்பிய கண்டத்துக்கு வெளியே போக்குவரத்து, காப்பீடு, நிதி பரிமாற்றம் ஆகியவற்றை ஏற்பாடு செய்துகொள்ளும் எவரும் ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்க முடியும். எனவே, ரஷியா உள்பட உலகின் எந்த நாடுகளிடம் இருந்தும் இந்தியா தொடா்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT