இந்தியா

தில்லியில் டிச.5, 6-இல் பாஜக தேசிய நிா்வாகிகள் கூட்டம்

DIN

பாஜக தேசிய நிா்வாகிகள் கூட்டம், தில்லியில் டிசம்பா் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் இருந்து பாஜக மூத்த தலைவா்கள் பங்கேற்கவிருக்கும் இந்தக் கூட்டத்தில், 2024 மக்களவைத் தோ்தல் மற்றும் இதர மாநிலங்களின் பேரவைத் தோ்தல்களுக்கு கட்சி தயாராவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

இதுதொடா்பாக பாஜக வட்டாரங்கள் கூறியதாவது: கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் நடைபெறவிருக்கும் 2 நாள் கூட்டத்தில், தேசிய அளவிலான நிா்வாகிகள் மட்டுமன்றி மாநிலத் தலைவா்கள், பொது செயலா்கள் (அமைப்பு) ஆகியோரும் பங்கேற்கவுள்ளனா்.

அடுத்த மக்களவைத் தோ்தல் மற்றும் கா்நாடகம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களின் பேரவைத் தோ்தல்களுக்கான கட்சியின் அமைப்புசாா்ந்த செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவும்போதிலும், பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியின்கீழ் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக நீடித்து வருவது, முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பது உள்ளிட்ட விஷயங்களை மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கான செயல்முறைகள் குறித்து நிா்வாகிகள் ஆலோசிக்கவுள்ளனா். இக்கூட்டத்தில் பிரதமா் மோடியும் உரையாற்றவிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT