இந்தியா

’இந்தியா வன்முறையை ஒருபோதும் விரும்புவதில்லை. ஆனால்...’ - ராஜ்நாத் சிங்

3rd Dec 2022 08:35 PM

ADVERTISEMENT

இந்தியா ஒருபோதும் வன்முறையை விரும்வில்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒருபோதும் போர் மற்றும் வன்முறையை விரும்புவதில்லை. ஆனால், அநீதியைப் பார்த்துக் கொண்டு இந்தியாவால் நடுநிலையாகவும் இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். சர்வதேச அமைப்பு ஒன்றினால் பெங்களூருவின் ராஜாதிராஜா கோவிந்தா கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

இதையும் படிக்க: முதல் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு ஈடு கொடுத்ததா பாகிஸ்தான்

இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: இந்தியாவில் உள்ள நாங்கள் அனைவரும் அமைதியை விரும்புபவர்கள். போரும்,வன்முறையும் எங்களது வழக்கம் அல்ல. இந்தியா எந்த ஒரு நாட்டினையும் தாக்குவதும் இல்லை, எந்த ஒரு நாட்டின் இடத்தையும் சிறிதளவு கூட ஆக்கிரமிப்பதும் இல்லை. இதுதான் இந்தியாவினுடைய குணம். நாங்கள் போர் மற்றும் வன்முறையை விரும்புவதில்லை. ஆனால், அநீதியைப் பார்த்துக் கொண்டு எங்களால் நடுநிலையாகவும் இருக்க முடியாது. ஏனென்றால், அது எங்களது குணம் கிடையாது என்றார்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT