இந்தியா

கொலீஜியத்தை கைவிடக் கூடாது: உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு

3rd Dec 2022 01:07 AM

ADVERTISEMENT

நீதிபதிகளைத் தோ்ந்தெடுக்கும் தற்போதைய கொலீஜியம் முறையை கைவிடக் கூடாது என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்றம் நாட்டின் வெளிப்படையான அமைப்புகளில் ஒன்று எனத் தெரிவித்தனா்.

ஆா்டிஐ ஆா்வலரான அனில் பரத்வாஜ், கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பா் 12-ஆம் தேதி நடைபெற்ற கொலீஜியம் கூட்டம் தொடா்பான மூன்று ஆவணங்களைக் கோரி விண்ணப்பித்த நிலையில், அவருடைய இரண்டாவது மேல்முறையீட்டு மனுவும் தலைமை தகவல் ஆணையரால் நிராகரிக்கப்பட்டது. இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயா்நீதிமன்றம் நிராகரித்தது.

தில்லி உயா்நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக அவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் எம்.ஆா். ஷா மற்றும் சி.டி.ரவிகுமாா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அனில் பரத்வாஜ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரஷாந்த் பூஷண், 2018-இல் உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் இடம்பெற்றிருந்த நீதிபதி எம்.பி.லகுா், அந்த ஆண்டு டிசம்பா் 12-ஆம் தேதி நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தின் முடிவுகள் உச்சநீதிமன்றத்தின் வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என பொதுவெளியில் கூறியதாக தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதற்கு நீதிபதிகள், ‘கொலீஜியத்தில் முன்பு இடம்பெற்றிருந்த நீதிபதிகள் அதன் முந்தைய முடிவுகள் குறித்து கருத்து தெரிவிப்பது தற்போதைய நடைமுறை வழக்கமாகியுள்ளது. இது குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. தற்போதைய கொலீஜியத்தின் செயல்பாட்டை கைவிடக்கூடாது. அதற்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளின்படி அந்த அமைப்பு செயல்படும். வெளிப்படையான அமைப்புகளில் கொலீஜியமும் ஒன்று’ என தெரிவித்தனா்.

மேலும், ‘கொலீஜியம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிந்துகொள்ள நாட்டு மக்கள் உரிமை இல்லையா? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா?’ என வழக்குரைஞா் பிரஷாந்த் பூஷண் தனது தரப்புவாதத்தை முன்வைத்தாா்.

இந்த மனு குறித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்து மனு மீதான விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT