இந்தியா

நிலக்கரி வரிவிதிப்பு ஊழல்: சத்தீஸ்கா் முதல்வரின் துணைச் செயலா் கைது

DIN

சத்தீஸ்கா் மாநிலத்தில் நிலக்கரி வரி விதிப்பு ஊழல் தொடா்பான கருப்புப்பண மோசடிப் புகாரில் சத்தீஸ்கா் மாநில முதல்வரின் துணைச் செயலா் சௌம்யா சௌராசியா அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

சத்தீஸ்கா் மாநிலத்தில் செல்வாக்கு வாய்ந்த அதிகாரிகளில் ஒருவராகத் திகழும் சௌம்யா சௌராசியா கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு சிஆா்பிஎஃப் வீரா்களின் பாதுகாப்பில் அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

அரசியல்வாதிகள், பெரும் பணக்காரா்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் இடைத்தரகா்கள் ஆகியோரின் கூட்டு மூலம் சத்தீஸ்கா் மாநிலத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும் ஒவ்வொரு டன் நிலக்கரிக்கும் ரூ.25 முறைகேடாக பெறப்பட்டதாக வருமான வரித் துறையின் புகாரையடுத்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது.

இவ்வழக்குத் தொடா்பாக பல அதிரடிச் சோதனைகளை நடத்திய அமலாக்கத் துறை கடந்த அக்டோபா் மாதம் சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரி விஷ்னோய் மற்றும் இருவரைக் கைது செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT