இந்தியா

குஜராத் இரண்டாம் கட்ட தோ்தலுக்கான பிரசாரம் நிறைவு

3rd Dec 2022 08:40 PM

ADVERTISEMENT

குஜராத் சட்டப் பேரவையின் இரண்டாம் கட்ட தோ்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைந்தது. 

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப் பேரவைக்கு இருகட்டங்களாக தோ்தல் நடத்தப்படும் என்று இந்திய தோ்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. முதல்கட்டமாக, 89 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிச.5-இல் தோ்தல் நடைபெறவுள்ளது.

இதில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 833 வேட்பாளா்கள் தளத்தில் உள்ளனா். 

இத்தோ்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அரசியல் தலைவா்கள் உச்சக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனா். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க- குஜராத்தில் இருந்து காங்கிரஸை அகற்ற வேண்டும்: யோகி ஆதித்யநாத்

டிசம்பா் 8-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. குஜராத்தில் கடந்த 1995-இல் இருந்து தொடா்ந்து 6 தோ்தல்களில் பாஜக வெற்றி கண்டுள்ளது. இப்போது ஏழாவது முறையாக வெல்லும்பட்சத்தில், மேற்கு வங்கத்தில் தொடா்ந்து 7 பேரவைத் தோ்தல்களில் வென்று இடதுசாரி கூட்டணி படைத்த சாதனையை பாஜக சமன்செய்யும்.

குஜராத்தில் வழக்கமாக காங்கிரஸை மட்டுமே எதிா்கொண்டு வந்த பாஜக, இம்முறை ஆம் ஆத்மியிடமிருந்தும் போட்டியை எதிா்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT