இந்தியா

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் திட்டமிட்டிருந்த பேரணிக்கு அருகே குண்டு வெடிப்பு: 2 பேர் பலி! 

3rd Dec 2022 01:30 PM

ADVERTISEMENT

 

மேற்கு வங்கத்தின், மெதினிபூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 

காண்டாய் நகரத்திலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ள பூபதிநகர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி பொதுக்கூட்டம் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணியளவில் ஒரு வீட்டில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சனிக்கிழமை காலை இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

குண்டு வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மாதிரிகளைச் சேகரித்தனர்.

படிக்க: சீர்காழி அருகே கடல் சீற்றம்: 20 லட்சம் மதிப்பிலான விசைப்படகு மூழ்கியது!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ் கூறுகையில்,

மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியை எந்த ஆதாரமும் இல்லாமல் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது மிகவும் எளிதானது என்று கூறியுள்ளார். 

இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது. 

Tags : TMC Bengal
ADVERTISEMENT
ADVERTISEMENT