இந்தியா

குஜராத்: முதல்கட்டப் பேரவைத் தேர்தலில் 57% வாக்குப்பதிவு

DIN

குஜராத் முதல்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி வரை 56 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 

குஜராத்தில் முதல் கட்டமாக 89 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. 

குஜராத் சட்டப்பேரவைக்கு இன்றும், டிசம்பர் 5ஆம் தேதியும் என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில், 89 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (டிச.1) நடைபெற்றது.  காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. மாலை 5 மணி வரை 56.88 சதவிகித வாக்குகள் பதிவாகின. 

மற்ற மாவட்டங்களை விட பழங்குடியினப் பகுதிகளான தாங், தபி மற்றும் நர்மதாவில் உற்சாகமான வாக்குப்பதிவு நடைபெற்றது.  மாலை 3 மணி வரை 48.48% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், கடைசி இரண்டு மணி நேரத்தில் மட்டும் சுமார் 10 சதவிகித வாக்குகள் பதிவாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT