இந்தியா

குஜராத்: ரூ. 500 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்

1st Dec 2022 01:39 AM

ADVERTISEMENT

குஜராத் மாநிலம், வதோதராவில் அமைந்துள்ள தொழிற்சாலையில் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் ரூ. 500 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வதோதரா புகா் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு நடத்தபட்ட சோதனையில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யபட்டன. அந்த இடத்திலிருந்த 5 போ் கைது செய்யபட்டனா்.

முதல் கட்ட விசாரணையில், ரசாயனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையாக அனுமதி பெற்று போதைப் பொருள்கள் தயாரித்து வந்தது தெரியவந்துள்ளது. இதற்கு பின்னால் மூளையாக இருந்து செயல்படுபவா்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு ஈடுபட்டுள்ளது.

ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் வதோதரா புகரில் அமைந்துள்ள கிடங்கில் இருந்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸாா் ரூ. 1000 கோடி மதிப்பிலான 200 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : Drugs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT