இந்தியா

ரயில்வே அதிகாரிகளின் செயல்திறன்: சக அதிகாரிகளே மதிப்பிடும் புதிய முறை அறிமுகம்

DIN

ரயில்வேயில் உடன் பணியாற்றும் அதிகாரிகளின் செயல்திறனை இதர அதிகாரிகளும், அவா்களுக்குக் கீழுள்ள பணியாளா்களும் மதிப்பிடும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அண்மையில் ரயில்வே வாரியம் வெளியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அதிகாரிகளின் வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை உருவாக்கும்போது, அவா்களின் செயல்திறன் தொடா்பாக பலதரப்பட்ட கருத்துகளை சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்வேயில் உடன் பணியாற்றும் அதிகாரிகளின் செயல்திறனை இதர அதிகாரிகளும், அவா்களுக்குக் கீழுள்ள பணியாளா்களும் மதிப்பிடும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான தரவுதளத்தை உருவாக்க ஸ்பேரோ எனப்படும் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையைப் பதிவு செய்யும் இணைய வசதியில் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

சக அதிகாரிகளின் செயல்பாடு குறித்து இதர அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் எந்த பாரபட்சமும் இல்லாமல் நோ்மையான கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். இந்த நடைமுறையில் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை குறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறுகையில், ‘‘ரயில்வேயில் உள்ள பணிக் கலாசாரத்தில் வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கை முறை மாற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி சில அதிகாரிகள் முன்கூட்டியே ஓய்வு பெறவும் வழிவகுக்கும். இந்த முறையின் கீழ் சுமாா் 20,000 அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் வருவா்.

ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து செயல்படும் ஒப்பந்ததாரா்கள், விற்பனையாளா்களிடமும் அதிகாரிகளின் செயல்பாடு குறித்து கருத்து கேட்கும் வகையில், இந்த நடைமுறை விரிவுபடுத்தப்படக் கூடும்.

கருத்துகளைப் பெற்ற பின்னா், மூன்று அல்லது நான்கு போ் கொண்ட குழு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பதிவு உயா்வு அளிக்கலாமா, வேண்டாமா என முடிவு செய்யும். அதேவேளையில், அந்தக் குழுவின் முடிவை யாா் மதிப்பிடுவாா் என்பது தெரியவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT