இந்தியா

ஜம்முவில் வைஷ்ணவி தேவி கோயிலில் மீண்டும் பக்தர்கள் அனுமதி

ANI


ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மழை நின்று, வெள்ளம் குறைந்த நிலையில், சனிக்கிழமை, வைஷ்ணவி தேவி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜம்முவில் இருந்து 50 கிலோமீட்டா் தொலைவில் உள்ள திரிகுடா மலையின் உச்சியில் அமைந்துள்ளது வைஷ்ணவி தேவி கோயில். நேற்று இப்பகுதியில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டதால் பக்தர்களின் பாதுகாப்புக்காக கத்ரா பகுதியிலிருந்து செல்லும் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சிஆர்பிஎஃப் வீரல்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இன்று காலை மழை குறைந்ததையடுத்து, மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT