இந்தியா

மதுரா கோயிலில் நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் மூச்சுத் திணறி பலி

DIN

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரா கோயிலில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் இறந்தனர். 

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் நள்ளிரவு விழாவில் பங்கேற்பதற்காக பக்தர்கள் குவிந்தனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா கிருஷ்ணரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. புராணங்களின்படி, கிருஷ்ணரின் பிறப்பு நள்ளிரவில் நடந்ததாக கூறப்படுகிறது. ஜென்மாஷ்டமி அன்று நள்ளிரவு சடங்குகளுக்குப் பிறகு சிறப்பு பிரசாதம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மதுரா வீடு பான்கே பிகாரி என்ற கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டனர். 

கோயிலில் நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு கோயிலுக்குள் நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கிக் கொண்ட ஒரு பெண், ஆண் என 2 பக்தர்கள் மூச்சுத் திணறி இறந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மதுராவில் உள்ள மூத்த போலீஸ் அதிகாரி அபிஷேக் யாதவ் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT