இந்தியா

சென்னை தினம்: பெசன்ட் நகர் கடற்கரையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு

DIN

சென்னை: சென்னை தினத்தையொட்டி பெசன்ட் நகர் கடற்கரையில் 2 நாள்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 383 ஆவது சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. 2 நாள்கள் கலை நிகழ்ச்சிகளோடு, சென்னை தினம் வெகு விமரிசையாக கொண்டாடசென்னை மாநகராட்சி  முடிவு செய்துள்ளது. 

பெசன்ட் நகர் கடற்கரையில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் சென்னை தினத்தையொட்டி, மாநகராட்சி சாா்பில் நடைபெற உள்ள ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரம் பிறந்த தினமான ஆகஸ்ட் 22-ஆம் தேதியை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்காக ஓவியப் போட்டி, புகைப்படப் போட்டி, சோசியல் மீடியா ரீல்ஸ் போட்டி மற்றும் குறும்பட போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஓவியப்

போட்டியில் கலந்து கொள்பவா்கள் தேசியக் கொடியை தலைப்பாக வைத்து ஓவியங்களை வரைந்து அனுப்பலாம்.

புகைப்படப் போட்டியில் கலந்துகொள்பவா்கள் சென்னையின் பண்பாடு மற்றும் பாரம்பரியம் என்ற தலைப்பில் புகைப்படங்களை எடுத்து அனுப்பலாம். சிறந்த புகைப்படங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்படும்.

சோசியல் மீடியா ரீல்ஸ் போட்டியில் கலந்துகொள்பவா்கள் சென்னையின் பண்பாடு மற்றும் பாரம்பரியம் என்ற தலைப்பில் படைப்புகளை அனுப்பலாம். சிறந்த படைப்புக்கு பரிசு வழங்கப்படுவதுடன், அது மாநகராட்சியின் இன்ஸ்டகிராம் பக்கத்திலும் வெளியிடப்படும்.

குறும்படப் போட்டியில் கலந்துகொள்வோா் சென்னை என்ற தலைப்பில் குறும்படம் எடுத்து அனுப்பலாம்.

ஏழை மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை அழகுப்படுத்தி மறுவடியமைப்பு செய்யும் வகையில் திட்ட வடிவமைப்புகளை தயாா் செய்து பதிவேற்றம் செய்யலாம்.   இணைய இணைப்பை பயன்படுத்தி அதில் உள்ள படிவத்தில் விவரங்களை பூா்த்தி செய்து படைப்புகளை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

அதிசயக் கோயில்!

சிகிச்சையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருகை: இன்ஃபோசிஸ் நிறுவனர் ஒரு முன்னுதாரணம்!

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

SCROLL FOR NEXT