இந்தியா

சாலை மேம்பாலத்தில் ஆட்டோ ஓட்டியவர்: வைரலாகும் விடியோ

19th Aug 2022 05:54 PM

ADVERTISEMENT


மும்பை - ஆமதாபாத் நெடுஞ்சாலையைக் கடக்க சிரமமாக இருப்பதால், சாலை மேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற ஓட்டுநரின் விடியோ வைரலாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க காவல்துறையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதையும் படிக்க | அம்பானி வீடு இல்லை.. ஆர்டிஓ வீடு; மலைத்துப் போன அதிகாரிகள் (விடியோ)

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டம் விரார் அருகே நெடுஞ்சாலையைக் கடப்பதற்கு, மக்கள் சாலையைக் கடக்க அமைக்கப்பட்ட மேம்பாலத்தில் சாதுர்யமாக ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார்.

 

ADVERTISEMENT

படிகளில் ஆட்டோவை மேலே ஏற்றி, அடுத்தப் பாதையல் படிகட்டு வழியாக ஆட்டோவை இறக்கியுள்ளார்.

இந்த விடியோவுக்கு பல தரப்பிலிருந்தும் பரவலான கருத்துகள் எழுந்து வருகின்றன. சிலர் அவரது திறமையை பாராட்டியுள்ளனர். சிலர் தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளனர். எதுவாக இருந்தாலும் விடியோ வைரலாகிவிட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT