இந்தியா

காந்தி புகைப்படம் சேதம்: ராகுல் காந்தியின் ஊழியர்கள் உள்பட 4 காங்கிரஸார் கைது

19th Aug 2022 05:04 PM

ADVERTISEMENT

 

கேரளத்தில் காந்தி புகைப்படத்தை சேதப்படுத்தியதற்காக ராகுல் காந்தியின் 2 ஊழியர்கள் உள்பட 4 காங்கிரஸார் கைது செய்யப்பட்டனர். 

கேரள மாநிலம் வயநாட்டில் எம்.பி.யாக உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தை  கடந்த ஜூன் 24 ஆம் தேதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் பிரிவான இந்திய மாணவா் கூட்டமைப்பைச் (எஸ்எஃப்ஐ) சோ்ந்தவா்கள் அடித்து நொறுக்கினர். அப்போது, சுவரில்  மாட்டப்பட்டிருந்த காந்தியின் புகைப்படமும் சேதமானது.

பின், இந்தத் தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், புகைப்படத்தை அங்கு பணியாற்றி வந்த 2 ஊழியர்கள் உள்பட 4 காங்கிரஸார் சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: சிறைகள்தோறும் வகுப்பறைகள்: மாநில அரசின் புது முயற்சி

அதனால், இன்று ராகுல் காந்தியின் அலுவலகத்திற்குச் சென்ற கல்பெட்டா சரக காவலர்கள் 4 பேரை கைது செய்தனர். பின்,  அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT