இந்தியா

பாஜக இதை செய்தால் இந்தியாவிற்கு பாகிஸ்தானின் நிலை வரும்: அசோக் கெலாட்

DIN

ஆளும் பாஜக இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்ற நினைத்தால் இந்தியாவிற்கு பாகிஸ்தானின் நிலை தான் உருவாகும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் மாநிலத் தேர்தல் பணிகளை கவனிக்கும் பொறுப்பில் இருக்கும் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசுவதற்காக இரண்டு நாள் பயணமாக குஜராத்திற்கு வருகை புரிந்துள்ளார்.  

அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “ மதத்திற்காகவே மட்டுமே தேர்தலில் பாஜக வெற்றி பெற நினைக்கிறது. நாடு முழுவதும் பாஜகவினால் பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதத்திற்காக மட்டுமே பாஜக தேர்தலில் போட்டியிட்டு வெல்கிறார்கள். பாஜகவிற்கு எந்த ஒரு கொள்கையும் கிடையாது. பாஜக இந்தியாவை இந்துக்கள் நாடாக மாற்ற நினைத்தால் பாகிஸ்தானின் நிலை தான் இந்தியாவிற்கும் வரும். மதத்தை வைத்து அரசியல் செய்வது அனைவருக்கும் எளிதாகும். அதனை அடால்ஃப் ஹிட்லரும் செய்திருக்கிறார்.

பாஜக மக்களை குஜராத் மாடல் ஆட்சி எனக் கூறி தவறாக வழிநடத்தி வருகிறது. நாங்கள் 2017 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக்கு மிக அருகில் இருந்தோம். ஆனால், துரதிருஷ்டவசமாக பிரதமர் மோடி பாலிவுட் நடிகர் போல அற்புதமாக நடித்து எங்களை தோல்வியடையச் செய்தார்.

182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் பாஜக 99 இடங்களையும், காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றியது. பாஜகவின் அமலாக்கத் துறை மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று பின்னர் சில சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜவில் இணைந்துள்ளனர். இதிலிருந்து பாஜகவின் குதிரை பேர மாடல் நன்றாகத் தெரிகிறது.

தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வந்து பாஜக தனக்கு அதிக அளவிலான அரசியல் நிதியினை திரட்டிக் கொள்கிறது. மற்ற கட்சிகளுக்கு இது பாரபட்சமாக உள்ளது. இந்த தேர்தல் பத்திரங்கள் நாட்டினை அழிக்கக் கூடியவை. பயத்தினால் தொழிலதிபர்கள் இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவிற்கு நிதியளிக்கின்றனர். பணம் கொடுக்கவில்லை என்றால் அமலாக்கத் துறை சோதனையை சந்திக்க நேரிடும் என அவர்கள் அஞ்சுகிறார்கள். இந்தியாவைப் பாதுகாக்க காங்கிரஸ் தேவை.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT