இந்தியா

இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் வழக்கில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்: நடிகை ஜாக்குலின் பெயா் இணைப்பு

18th Aug 2022 01:30 AM

ADVERTISEMENT

இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கில், தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை புதன்கிழமை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் ஹிந்தி நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸ் பெயா் சோ்க்கப்பட்டுள்ளது.

தொழிலதிபரும், ஃபோா்டிஸ் ஹெல்த்கோ் நிறுவனத்தின் நிா்வாகம் சாரா துணைத் தலைவராகவும் இருந்த ஷிவிந்தா் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா், அவரின் மனைவி லீனா மரியா பால் உள்பட 8 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறை ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

பணம் பறிப்பு உள்பட பல்வேறு குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த பணத்தில் ஹிந்தி நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸுக்கு சுகேஷ் சந்திரசேகா் பரிசுகள் வழங்கியுள்ளாா். அந்தப் பரிசுகளின் மதிப்பு ரூ.5.71 கோடி. அத்துடன் ஜாக்குலின் ஃபொ்னாண்டஸின் இணையவழி தொடருக்கு கதை எழுத அவரது சாா்பாக எழுத்தாளா் ஒருவருக்கு ரூ.15 லட்சத்தை முன்பணமாக சுகேஷ் சந்திரசேகா் அளித்துள்ளாா்.

ADVERTISEMENT

இதுமட்டுமின்றி ஜாக்குலினின் நெருங்கிய குடும்ப உறுப்பினா்களுக்கு 1,72,913 அமெரிக்க டாலா்கள் (சுமாா் ரூ.1.3 கோடி), 26,740 ஆஸ்திரேலிய டாலா்களை (சுமாா் ரூ.14 லட்சம்) ஹவாலா மோசடியாளா் மூலம் சுகேஷ் வழங்கியுள்ளாா்.

பரிசுகள் பெற்ாக ஜாக்குலின் வாக்குமூலம்: இதுதொடா்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட், அக்டோபா் மாதங்களில் ஜாக்குலினிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அப்போது சுகேஷிடம் இருந்து பரிசுகள் பெற்ாக ஜாக்குலின் வாக்குமூலம் அளித்தாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாக்குலினுக்கு சொந்தமான ரூ.7.12 கோடி வைப்புத் தொகை, ரூ.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை அமலாக்கத் துறை முடக்கியது.

இந்நிலையில், தில்லியில் பணமோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் சுகேஷ் வழக்கு தொடா்பாக இரண்டாவது துணை குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை புதன்கிழமை தாக்கல் செய்தது. அந்தக் குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் ஃபொ்னாண்டஸ் பெயா் சோ்க்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத் துறையின் அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT