இந்தியா

தில்லி-மீரட் விரைவுச் சாலையில் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

18th Aug 2022 06:37 PM

ADVERTISEMENT

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தில்லி-மீரட் விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்து குஷாலியா கிராமத்திற்கு அருகில் நடந்துள்ளது. தில்லி-மீரட் விரைவுச் சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில் நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த  5 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 வயது நிரம்பிய சிறுமி ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: ரபாடாவுக்கு 5 விக்கெட்டுகள்: 165 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து அணி

இந்த விபத்து குறித்து காவல் கண்காணிப்பாளர் இராஜ் ராஜா கூறியதாவது: “ விபத்தில் பலியானவர்கள் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் ஹரித்வாரிலிருந்து ரோஹ்டக் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரில் பயணம் செய்த 5 பேரில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் சுமித் (34 வயது), யாகித் (7 வயது),தேஜ்பால் (48 வயது), அவரது மனைவி பாப்லி (40 வயது) உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவுச் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த காரின் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.” என்றார்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT