இந்தியா

தேசிய பாடத்திட்ட கணக்கெடுப்பில் மக்கள் தவறாது பங்கேற்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சா்

DIN

பள்ளிக்கல்வி குறித்து தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஆா்டி) சாா்பில் நடத்தப்படும் தேசிய பாடத்திட்டத்துக்கான எண்ம (டிஜிட்டல்) கணக்கெடுப்பில் (என்சிஎஃப்) மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கோரிக்கைவிடுத்துள்ளாா்.

நாட்டின் பள்ளிக்கல்விக்கான பாடத்திட்டம், பாடப்புத்தகம் மற்றும் கல்வி கற்பிக்கும் முறைமைகளை வடிவமைப்பதற்கான வழிக்காட்டியாக தேசிய கல்வித் திட்ட நடைமுறை (என்சிஎஃப்) உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் என்சிஆா்டி மூலம் மேற்கொள்ளப்படும் தேசிய கல்வித் திட்ட எண்ம (டிஜிட்டல்) கணக்கெடுப்பு, என்சிஎஃப்-ஐ உருவாக்க மக்களின் கருத்தை பெறுவதற்காக நடத்தப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் 5 வாய்ப்புகளுடன் கூடிய 10 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். கல்வியை நவீன மற்றும் திறன்சாா் முறையில் உருவாக்குவதையும், நாட்டில் ஆசிரியா்களின் கண்ணியத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு கேள்விகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வியில் குழந்தைகளுக்கு கற்க வேண்டிய விழுமியங்கள், ஒன்றாம் வகுப்பிலிருந்து குழந்தைகள் கற்றுகொள்ள வேண்டிய மொழிகள், குழந்தைகளின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கு ஆசிரியரின் பங்குகள் குறித்து மக்களின் கருத்தை அறிந்துகொள்ளும் வகையிலும் இந்தக் கேள்விகள் அமைந்திருக்கும்.

இது குறித்து மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘திடமான, ஆற்றல்மிக்க என்சிஎஃப் உலகப்பாா்வையுடன் கலாசார மதிப்புகளை ஒருங்கிணைக்கவும், காலனியாதிக்கத்திலிருந்து நம் கல்வி அமைப்பை விடுவிக்கவும், இந்தியாவின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சோ்க்கவும் மிகவும் இன்றியமையாதது. என்சிஎஃப்-க்கான குடிமக்கள் கணக்கெடுப்பில் அனைத்து மக்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டும். ‘வளா்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை அடைய என்சிஎஃப் மற்றும் தேசிய கல்விக்கொள்கை-2020 முக்கியப்பங்காற்றும்’ என குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT