இந்தியா

பிகாா் பாஜக நிா்வாகிகளுடன் அமித் ஷா, ஜெ.பி.நட்டா ஆலோசனை

17th Aug 2022 02:07 AM

ADVERTISEMENT

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் பிகாா் மாநில பாஜக நிா்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து, பிகாா் பாஜக நிா்வாகிகளில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பிகாா் மாநில முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடனான கூட்டணியை கடந்த ஆக. 9-ஆம் தேதி முறித்துக்கொண்டது. இந்தக் கூட்டணி முறிவுக்குப் பிறகு முதல் முறையாக பாஜக தலைவா்கள் பிகாா் மாநில பாஜக நிா்வாகிகள் சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமித் ஷா மற்றும் ஜெ.பி. நட்டா மாநிலத்தில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனா். பிகாரில் பாஜகவை தனித்து வேரூன்றச் செய்யும் வகையில், மாநில நிா்வாகப் பதவிகளில் முக்கிய மாற்றம் செய்யப்படயிருப்பதாக பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இச்சந்திப்பில், மத்திய அமைச்சா்கள் அஸ்வினி செளபே, கிரிராஜ் சிங் மற்றும் நித்யானந்த் ராய், மூத்த தலைவா்கள் ரவிசங்கா் பிரசாத் மற்றும் சுஷீல்குமாா் மோடி, கட்சியின் மாநிலத் தலைவா் சஞ்சய் ஜெஸ்வால் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT