இந்தியா

'சுதந்திர நாளில் குற்றவாளிகள் விடுதலை' - பில்கிஸ் பானு வழக்கில் ராகுல் காந்தி கண்டனம்

DIN

குஜராத் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்ற வகுப்புவாத கலவரத்தில் கா்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும் மூன்று வயது குழந்தை உள்பட அவரது குடும்பத்தினா் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இதில், குற்றவாளிகள் 11 பேருக்கு மும்பை உய்ரநீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து கருணை அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக குஜராத் அரசு திங்கள்கிழமை அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், '5 மாத கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் வன்மொடுமை செய்து 3 வயது பெண் குழந்தையைக் கொன்றவர்கள், சுதந்திர நாளில்(ஆசாதி கே அம்ரித் மஹோத்சவ்) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பெண்களின் சக்தி குறித்துப் பேசும் இந்த நாட்டு பெண்களுக்கு இது என்ன செய்தியைச் சொல்கிறது?

பிரதமர் அவர்களே, உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை இந்த முழு நாடும் பார்க்கிறது' என்று ஹிந்தியில் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT