இந்தியா

காவல் நிலையத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட பெண் காவலர்!

16th Aug 2022 04:44 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் பெண் காவலர் ஒருவர் காவல் நிலையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் தாணே நகரம் வாக்லே எஸ்டேட் பிரிவுக்கு உள்பட்ட ஸ்ரீநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 34 வயது பெண் காவலர் நாயக் அனிதா பீம்ராவ் வாவல். 

இவர் இன்று பிற்பகல் 1. 30 மணியளவில் காவல் நிலையத்தில் தூக்கிட்டு நிலையில் இறந்து கிடந்துள்ளார். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

காவல் நிலைய அறையில் துப்பட்டா கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

ADVERTISEMENT

சொந்தப் பிரச்னை காரணமாக அவர் இந்த முடிவு எடுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதையும் படிக்க | சைவ உணவு சாப்பிடும் பெண்களுக்கு இப்படி ஒரு பிரச்னை வருமா?

ADVERTISEMENT
ADVERTISEMENT