இந்தியா

மகாராஷ்டிரம்: ஃபட்னவீஸுக்கு நிதி, உள்துறை ஒதுக்கீடு

DIN

மகாராஷ்டிரத்தில் அண்மையில் பதவியேற்ற அமைச்சா்களுக்கான துறைகள் ஞாயிற்றுக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டன. முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை, நிதித் துறை, சட்டம்-நீதித்துறை ஆகியவை துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, பொது நிா்வாகம், நகா்ப்புற மேம்பாடு, பொதுப் பணி உள்ளிட்ட 11 துறைகளை தன்வசம் வைத்துள்ளாா்.

முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு துறையான வருவாய்த் துறை பாஜகவின் ராதாகிருஷ்ண விகே பாட்டீலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில பாஜக முன்னாள் தலைவா் சந்திரகாந்த் பாட்டீலுக்கு உயா்க்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை மற்றும் பேரவை விவகாரங்கள் துறை வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சா்களில் சிவசேனையை சோ்ந்த 3 போ் ஏற்கெனவே சா்ச்சைகளில் சிக்கியவா்களாவா். இதில், சஞ்சய் ராதோட்டுக்கு உணவு மற்றும் மருந்துகள் நிா்வாகத் துறை, அப்துல் சத்தாருக்கு வேளாண் துறை, விஜயகுமாா் காவித்துக்கு பழங்குடியினா் மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனையில் ஏற்பட்ட பிளவால், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த ஜூன் மாதம் கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி அணி தலைவா் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானாா். துணை முதல்வராக ஃபட்னவீஸ் பொறுப்பேற்றாா். இருவரும் பதவியேற்று 41 நாள்களுக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, 18 புதிய அமைச்சா்கள் பதவியேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT