இந்தியா

கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது எஸ்பிஐ

DIN


எஸ்பிஐ வழங்கும் அனைத்து விதமான கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித உயர்வானது ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தியது ரிசர்வ் வங்கி. இதையடுத்து, பல்வேறு வங்கிகளும் தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, எம்சிஎல்ஆர் அடிப்படையிலான அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ளது.

அதன்படி, 3 மாதங்களுக்கான வட்டி விகிதம் 7.35% ஆகவும், 6 மாதங்களுக்கான வட்டி விகிதம் 7.65 சதவீதமாகவும், ஓராண்டுக்கான வட்டி விகிதம் 7.70 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் 7.90 சதவீதமாகவும், மூன்றாண்டுகளுக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

வீட்டி விகித உயர்வால், எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்களைப் பெற்றவர்களுக்கான மாத தவணை அதிகரிக்கிறது.

விரைவில், எச்டிஎஃப்சி, ஐடிஎஃப்சி, கனரர் வங்கி உள்ளிட்ட வங்கிகளும் வட்டி விகித உயர்வை அதிகரிக்கவிருக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT