இந்தியா

‘ஒரு லட்சம் சிறிய வழக்குகள் திரும்பப் பெறப்படும்’: அசாம் முதல்வர்

15th Aug 2022 12:20 PM

ADVERTISEMENT

சுதந்திர நாளையொட்டி ஒரு லட்சம் சிறிய வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சுதந்திர நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தில்லி செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்று கொடியேற்றிய முதல்வர் ஹிமந்தா பேசியதாவது:

“நீதித்துறையின் சுமையை குறைக்க சமூக ஊடக பதிவு தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட சிறிய வழக்குகளை அசாம் அரசு திரும்பப் பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஹிமந்தாவின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்புத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT