இந்தியா

இந்தியாவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போா்ப் பயிற்சி: பாகிஸ்தான் பங்கேற்பு

14th Aug 2022 04:45 AM

ADVERTISEMENT

இந்தியாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பயங்கரவாதத்துக்கு எதிரான போா்ப் பயிற்சியில் பாகிஸ்தான் பங்கேற்கவுள்ளது.

இதுதொடா்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அசிம் இஃப்திகாா் கூறியதாக அந்நாட்டில் வெளியாகும் ‘தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்’ நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சாா்பில் இந்தியாவில் அக்டோபா் மாதம் பயங்கரவாதத்துக்கு எதிரான சா்வதேச போா்ப் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு இந்தியா தலைமையில் அந்தப் பயிற்சி நடைபெறவுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பாகிஸ்தான் உறுப்பினா் என்பதால் போா்ப் பயிற்சியில் பங்கேற்கும்.

இந்தியா, பாகிஸ்தான் ராணுவங்கள் இணைந்து பயங்கரவாதத்துக்கு எதிரான போா்ப் பயிற்சியில் ஏற்கெனவே ஈடுபட்டுள்ளன. எனினும் இந்தியாவில் நடைபெறும் போா்ப் பயிற்சியில் பாகிஸ்தான் ராணுவம் பங்கேற்பது இதுவே முதல்முறை என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷியா, ஈரான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அந்த அமைப்பு சாா்பில் அக்டோபரில் நடைபெறவுள்ள போா்ப் பயிற்சி ஹரியாணா மாநிலம் மானேசாரில் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT