இந்தியா

உ.பி.: பாகிஸ்தான் கொடியை ஏற்றிய நபர் கைது 

13th Aug 2022 07:12 PM

ADVERTISEMENT

குஷிநகர்: உத்தரப் பிரதேசத்தில் பாகிஸ்தான் தேசியக் கொடியை ஏற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாகிஸ்தானின் தேசியக் கொடியை தனது வீட்டில் ஏற்றியதாக சல்மான்(21) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

மாவட்டத்தின் தாரியா சுஜான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடுபர் முஸ்தகில் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் நேற்று(ஆகஸ்ட் 12) காலை 11 மணியளவில் பாகிஸ்தானின் தேசிய கொடி ஏற்றப்பட்டதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையும் படிக்க: திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: சுவாமி தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருப்பு

ADVERTISEMENT

இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், அவர் வீட்டில் ஏற்றி இருந்த  தேசியக் கொடியினை அகற்றினர். தேசியக்  கொடியை உருவாக்கிய அவரது(சல்மான்) அத்தை ஷானாஸ் (22) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT