இந்தியா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15.815 பேருக்கு தொற்று: 20,018 பேர் மீண்டனர்

13th Aug 2022 10:04 AM

ADVERTISEMENT


நாட்டில் வெள்ளிக்கிழமை கரோனா பாதிப்பு 16.561 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் புதிதாக 15.815 ஆக குறைந்துள்ளது. 68 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 16.561 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேலும் புதிதாக 15.815 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,42,39,372-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,19,264 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.27 சதவீதமாக உள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கத் தயாா்: நிதீஷ் குமாா்

தொற்று பாதித்தவர்களில் புதிதாக 68 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,26,996 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.

கரோனாவில் இருந்து 20,018 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,35,93,112-ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.54 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மாவட்டங்களின் வளா்ச்சிகளில் வேறுபாடுகள் கூடாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நாடு முழுவதும் இதுவரை 2,07,71,62,098 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை மட்டும் 24,43,064 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT