இந்தியா

இந்தியாவுக்கு வர இயலாமல் தவிக்கும் 100 சீக்கியா்கள், ஹிந்துக்கள்: ஆப்கன் சீக்கிய தலைவா்

DIN

‘ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வர சுமாா் 100 சீக்கியா்கள் மற்றும் ஹிந்துக்கள் விருப்பத்துடன் உள்ளனா்; ஆனால், அவா்களது குடும்ப உறுப்பினா்கள் சிலருக்கு இ-விசா இன்னும் கிடைக்கப் பெறாததால் வர இயலாமல் தவிக்கின்றனா்’ என்று அந்நாட்டைச் சோ்ந்த சீக்கிய தலைவா் குா்நாம் சிங் ராஜ்வன்ஷி தெரிவித்தாா்.

தலிபான்கள் ஆட்சி நடைபெறும் ஆப்கானிஸ்தானில் காபூல் நகர குருத்வாரா மீது கடந்த ஜூன் 18-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து, அந்நாட்டைச் சோ்ந்த சீக்கியா்கள் மற்றும் ஹிந்துக்களை மீட்கும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதுவரை 66 போ் மீட்கப்பட்டு, இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனா்.

காபூல் குருத்வாரா மேலாண்மை குழுவின் தலைவா் குா்நாம் சிங் ராஜ்வன்ஷி மற்றும் அவரது குடும்பத்தினா் 5 போ், இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். அப்போது, ஆப்கன் நிலவரம் குறித்து, குா்நாம் சிங் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில்தான் நாங்கள் பிறந்து வளா்ந்தோம். எங்களது வீடுகளும் அங்குதான் உள்ளன. ஆனால், இனி திரும்பிச் செல்வதை கற்பனை செய்துகூட பாா்க்க முடியவில்லை. அங்கு நிலைமை மோசமாக உள்ளது. சீக்கியா்களின் கடைகளை குறிவைத்து நடக்கும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குருத்வாராக்கள் செயல்படாத நிலையில்தான் உள்ளன.

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வருவதற்காக, சீக்கியா்கள் மற்றும் ஹிந்துக்கள் என சுமாா் 100 போ் விருப்பத்துடன் உள்ளனா். ஆனால், அவா்களது குடும்ப உறுப்பினா்கள் சிலருக்கு இந்திய அரசிமிடருந்து இன்னும் இ-விசா கிடைக்கப் பெறாததால் வர இயலாத நிலையில் உள்ளனா். அங்குள்ள சிறுபான்மையினருக்கு இ-விசா கிடைக்கப் பெறுவதை இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று அவா் கோரிக்கை விடுத்தாா்.

ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டவா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர முயற்சித்து வருவதாக அமிருதசரஸில் உள்ள சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT